கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
மாலை, 3:00 மணியோடு...வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு:8 தொகுதிகளில் 144 வேட்பாளர்
காலை, 11:00 மணி முதல், மாலை, 3:00 வரை, மனுத்தாக்கல் நடக்கும். மாலை, 3:00 மணிக்கு, மனுத்தாக்கல் நடக்கும் வளாகம் நுழைவாயில் மூடப்படும்.மனுத்தாக்கலுக்கு காத்திருக்கும் வேட்பாளருக்கு, 'டோக்கன்' வழங்கி, அதன் வரிசை அடிப்படையில் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர். இறுதியாக, தொகுதியில் மனுத்தாக்கல் செய்துள்ள மொத்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.மனுத்தாக்கல் நடந்த அலுவலகங்களில், நாளை (20ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, வேட்புமனு பரிசீலனை நடக்கும். மனுக்கள் தாக்கல் செய்த வரிசை அடிப்படையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மனுக்களை பரிசீலனை செய்து, ஏற்றுக்கொண்டதா, தள்ளுபடி செய்யப்பட்டதா என்பதை அறிவிப்பர்.
போட்டியில் இருந்து விலக விரும்பும் வேட்பாளர், 22ம் தேதி மாலை, 3:00 மணிக்குள், வாபஸ் பெறலாம். அதன்பின், சின்னத்துடன் கூடிய இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர் கையேடு, செலவு கணக்கு புத்தகம் உள்ளிட்டவை வழங்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனுத்தாக்கல் நடந்த அலுவலகங்களில், நாளை (20ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, வேட்புமனு பரிசீலனை நடக்கும். மனுக்கள் தாக்கல் செய்த வரிசை அடிப்படையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மனுக்களை பரிசீலனை செய்து, ஏற்றுக்கொண்டதா, தள்ளுபடி செய்யப்பட்டதா என்பதை அறிவிப்பர்.