கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
மடத்துக்குளம்: தேர்தலுக்கான பொருட்கள் தயார்
தேர்தல் நடத்துவதற்கான, தேவைப்படும் பல்வேறு தேர்தல் தொடர்பான பொருட்களை, மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் சேகரிக்கும் பணிகளில் கடந்த சில நாட்களாக, தேர்தல் பணியாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதனை பிரித்து, சேகரித்து வந்தனர். பின்னர் சேகரிக்கப்பட்ட தேர்தல் பொருட்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் வகையில், தனித்தனியாக சாக்குப் பைகளில் போட்டு கட்டப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவு பெறப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என தேர்தல் பணியாளர்கள் தெரிவித்தனர்.