கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டித்தொடர் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட்டின் மிக முக்கியமான நிகழ்வாக கடந்த மாதம் 19-ந்தேதி டெல்லியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி தொடங்கி வைத்தார். ஜோதி வடமாநிலங்கள் தாண்டி 75 நகரங்களை கடந்து 23-ந்தேதி தமிழகத்துக்கு (கோவை மாநகரம்) வந்தது. இந்த ஜோதி இன்று காலை மாமல்லபுரத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னை மாநிலக்கல்லூரி அருகே உள்ள திடலுக்கு வந்தது.