கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. நாளுக்கு நாள் மாவட்டத்தில் உயர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது.இந்நிலையில் நேற்று மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று 43 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்தனர்.