கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
திருப்பூர் மாவட்டத்தில் 67.48 சதவீத ஓட்டுப்பதிவு
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், 67.48 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளில், 62 சுயேச்சைகள் உட்பட, 137 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை, 6:30 மணி முதல், ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்து, வாக்காளர் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். வெயிலின் கடுமையை உணர்ந்து, 10 மணிக்குள் ஓட்டளிக்க வேண்டுமென, வாக்காளர் ஓட்டுச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தனர்.காங்கயம் - 77.30, அவிநாசி - 75.17 சதவீதம், தாராபுரம் - 74.14, உடுமலை - 71.41 சதவீதம், மடத்துக்குளம் - 70.88 சதவீதம், பல்லடம் - 66.66 சதவீதம், திருப்பூர் வடக்கு - 62.60 சதவீதம், திருப்பூர் தெற்கு - 62.80 சதவீதம், என, சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.கடந்த, 2016 தேர்தலில், 72.68 சதவீதம் ஓட்டுப்பதிவாகிய நிலையில், நேற்று, 67.48 சதவீதம் பதிவாகியுள்ளது.