கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
ம.நீ.ம., மாநில பொருளாளரின் நிறுவனத்தில் நேற்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூரில் ம.நீ.ம., மாநில பொருளாளரின் நிறுவனத்தில் நேற்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.திருப்பூர், லட்சுமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். ம.நீ.ம., கட்சி மாநில பொருளாளர். இவரது, 'அனிதா டெக்ஸ்காட்' என்ற நிறுவனத்தில், சென்னை மற்றும் கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டது.நேற்று முன்தினம் நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்தது. பல்வேறு ஆவணங்களை அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். காலை மீண்டும் ஐந்து கார்களில் வந்த அதிகாரிகள் குழு நேற்று இரவு வரை, வரவு -செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். காலை மற்றும் மதிய உணவை ஓட்டலில் இருந்து வரவழைத்து சாப்பிட்டு, குழுவினர் விசாரணையை தொடர்ந்தனர்.சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ளவர்களிடமும் அதிகாரிகள் விசாரித்தனர்.