கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வருகிற 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் எந்திரங்கள் மாவட்டந்தோறும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.மேலும் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பறக்கும் படை அதிகாரிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பும் நடந்து வருகிறது.