செய்திகள் :

திருப்பூரில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை- கேரள வியாபாரிகள் காரில் ரூ.4 லட்சம் பறிமுதல்

post image

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நிலை கண்காணிப்பு குழு முத்து தாமஸ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டி- செட்டிப்பாளையம் செல்லும் சாலையில் நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் ரூ.4 லட்சம் பணம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரில் வந்த கேரளாவை சேர்ந்த ஹரீஷ், ஹபீப் ஆகியோரிடம் விசாரணைபோது அவர்கள் ஏலக்காய் வியாபாரம் தொடர்பாக திருப்பூருக்கு வந்ததாக தெரிவித்தனர்.