செய்திகள் :

திமுக ரவுடி கட்சி:

post image

கரூர் :

கரூர் தொகுதி வேட்பாளரான அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக.,வில் உண்மைக்கு, உழைப்புக்கு, தியாகத்துக்கு இடமில்லை. திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. அங்கு செந்தில்பாலாஜி போன்று யார் வேண்டுமானாலும் சேர் போடலாம். அதிமுக.,வில் இருந்து யார் போனாலும், மாவட்ட செயலர், மாநில பொறுப்பு, வேட்பாளர் என கொடுக்கின்றனர். ஆனால், அதிமுக.,வில் அப்படியல்ல, இந்த ஜனநாயக இயக்கத்தில் விஸ்வாசமுள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்.

திமுக அராஜகம் செய்யும் ரவுடி கட்சி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி. ஸ்டாலினின் மகன் உதயநிதி, டிஜிபி.,யையே மிரட்டியுள்ளார். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால், மக்கள் படாதபாடு படுவர். இவ்வாறு அவர் பேசினார்.