செய்திகள் :

ஆற்றில் மூழ்கி திருப்பூர் பள்ளிக்கூட மாணவர் உயிரிழப்பு

post image

திருப்பூர்

திருப்பூர்  அருகே உள்ள மங்கலம் பெரியபுத்தூரை சேர்ந்தவர் சலாவுதீன் (வயது 48). இவர் பனியன் துணி கழிவு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சல்மான்பாசித் (15) உள்பட 2 மகன்கள், ஒரு மகள். மூத்த மகனான சல்மான்பாசித் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சல்மான்பாசித் தனது குடும்பத்துடன் பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றுக்கு சென்றார். அங்கு அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

இதில் சல்மான்பாசித் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தண்ணீரில் நீந்தி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.இதைத்தொடர்ந்து இதுபற்றி கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு சென்று ஆற்றில் இறங்கி சல்மான்பாசித்தை தேடினர். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு சல்மான்பாசித் பிணமாக மீட்கப்பட்டார்.

vote for 100%