செய்திகள் :

திருப்பூர் நிதி நிறுவன அதிபர் குண்டர் சட்டத்தில் கைது

post image

திருப்பூர்:

கோவை வடவள்ளி தக்ஷா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 29). இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் நிதி நிறுவனம் ஒன்றை அனுமதியில்லாமல் நடத்தி வந்தார். மேலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் சீட்டு நடத்துவதாக கூறி திருப்பூர் மாநகரில் உள்ள 75-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ரூ.12.70கோடி பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அரவிந்த் சேலத்திலும் வெவ்வேறு பெயர்களில் புதிய நிதி நிறுவனங்களை தொடங்கி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

vote for 100%