செய்திகள் :

ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா- அவினாசியில் குடியிருப்பு பகுதி மூடல்

post image

அவினாசி:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அம்மாபாளையம் அருகேயுள்ள பாரதிநகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து பாரதிநகர் குடியிருப்பு பகுதி, சுகாதார துறையினரால், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வெளியாட்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டு ‘பேரிகார்டு’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

vote for 100%