செய்திகள் :

திருப்பூர் : ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டில் ரூ.5½ லட்சம் சிக்கியது

post image

திருப்பூர்

பறக்கும்படை அதிகாரியான மாரியப்பன் தலைமையிலான குழுவினர் உடனடியாக பிச்சம்பாளையம் வள்ளலார் வீதியில் உள்ள சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியரான சுமதி (வயது 35) வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். மேலும் வருமானவரித்துறை அதிகாரிகளும் வந்து சோதனை மேற்கொண்டனர்.

சுமதி ஸ்ரீநகர் மகாவிஷ்ணு நகரில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக உள்ளார். இவருடைய கணவர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சியின் கிளை செயலாளராக இருக்கிறார். மாலை 5 மணி முதல் இரவு வரை தொடர்ந்து விசாரணை நடந்தது.இந்த சோதனை குறித்து பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் கூறும்போது, சோதனை முடிவில் வீட்டில் இருந்த ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்திற்கு உரிய ஆவணங்கள் இ்ல்லாததால் அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.

vote for 100%