கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
முக கவசம் அணியாமல் நடமாடினால்...அபராதம் விதிப்பு!பறக்கும் படையினருக்கு கலெக்டர் உத்தரவு
திருப்பூர்:முக கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு, உடனடியாக அபராதம் விதிக்க, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 24 பறக்கும்படை;, 24 நிலை கண்காணிப்பு குழு; 16 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் இயங்கி வருகின்றன. பிரசாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளதால், கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் பறக்கும் படைஅதற்காக, வாடகை வாகனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. சட்டசபை தொகுதிக்கு கூடுதலாக, ஆறு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, சட்டசபை தொகுதியில், ஒரே நேரத்தில், மூன்று பறக்கும் படையும், ஒரு நிலை கண்காணிப்பு குழுவும் வாகன தணிக்கையில் ஈடுபடும்.
வீடியோ கண்காணிப்பு குழு, வேட்பாளர் மற்றும் கட்சியினரின் செலவு விவரங்களை கண்காணிக்கும். நிலை கண்காணிப்பு குழு, தொகுதியில் உள்ள முக்கிய ரோடுகளில் நின்று, வாகன சோதனை நடத்தும். பறக்கும் படையினர், தொகுதிக்குள் சுற்றி வந்து கொண்டே இருப்பர்.கட்டுப்பாட்டு அறைமாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, 1800 425 6989 என்ற எண்ணுடன், 24 மணி நேரமும் செயல்படுகிறது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை, இந்த எண்களில் தெரிவித்தால், பறக்கும் படையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தொற்று அதிகரிப்புதிருப்பூர் மாவட்டத்தில், இந்த மாத துவக்கத்தில் இருந்ததை காட்டிலும், கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ளது. காரணம், பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடையே விழிப்புணர்வு குறைந்துவிட்டது. கட்சியினர், எங்குமே சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. முககவசம் அணிவதும் சுமையாக கருத துவங்கி விட்டனர்.இத்தகைய அஜாக்கிரதையால், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுமக்களை எச்சரித்து, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், முககவசம் அணியாதவருக்கு அபராதம் விதிக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.அபராதம் விதிப்புகொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அடிக்கடி 'சானிடைசர்' பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இல்லாதபட்சத்தில், ரோந்து வரும் பறக்கும் படையினர், அந்தந்த இடத்திலேயே, முககவசம் அணியாதவருக்கு அபராதம் விதிக்கவும், கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி அவசியம்...
இதுகுறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும், முக கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொள்வதுடன், சமூக இடைவெளியுடன் அமர வேண்டும். வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வேட்பாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளை, கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும்.முக கவசம் அணியாமல் இருந்தால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், முதல் கட்ட பயிற்சியின் போது தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.