கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
பஸ் ஸ்டாப்பை ஒட்டி பேரிகார்டுகள்
உடுமலை:
உடுமலை, பொள்ளாச்சி இடையிலான பிரதான ரோட்டில், விபத்து மற்றும் நெரிசலைக் கட்டுப்படுத்த வைக்கப்படும் பேரிகார்டுகள், வாகன ஓட்டிகளை திணறடிக்கச் செய்கிறது.கடந்த காலத்தில் நான்கு வழிச்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க, முக்கியச் சாலைச் சந்திப்புகளில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது, நான்கு வழிச்சாலை முதல் உள்ளூர் நகரச்சாலை வரை, நெரிசலைக் குறைக்க பேரிகார்டுகள் வைக்கப்படுகிறது. தேவையற்ற இடங்களிலும் பேரிகார்டுகள் வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் திணறி வருவதுடன் விபத்துகளும் அதிகரிக்கின்றன.குறிப்பாக, உடுமலை - பொள்ளாச்சி இடையிலான ரோட்டில், அந்தியூர், கோமங்கலம்புதுார், கெடிமேடு, கோலார்பட்டி ஆகிய இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள், பஸ் ஸ்டாப் ஒட்டி அமைந்துள்ளது.அங்கு, பஸ் திடீரென நிறுத்தப்படுவதால், பின்னால் வேகமாக செல்லும் பிற வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், பேரிகார்டுகளில், போதுமான அளவில் ஒளிரும் ஸ்டிக்கர் கிடையாது. இரவில் வேகமாக வாகனத்தில் செல்வோர், அதனை அறியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.வாகன ஓட்டிகள் கூறுகையில், 'பேரிகார்டுகளை வைத்து விட்டாலே நெரிசல் குறையும் என கருதுகின்றனர். தேவையற்ற இடங்களிலும் பேரிகார்டு வைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, பிரதான ரோட்டை சந்திக்கும் கிராமச்சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்,' என்றனர்.